பாலத்தில் தனியாக கர்ப்பிணி செய்த காரியம்! பதறியடித்து ஓடிய மக்கள்! வெளியான நெஞ்சை உருக்கும் காரணம்!



pregnant-lady-commits-suicide-in-bridge

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்தவர் பிரியங்கா. 20 வயது நிறைந்த இவர் வேறு சமூகத்தை  சேர்ந்த பூவரசன் என்ற 25 வயது இளைஞனை காதலித்து கடந்த 7 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அவரது  கணவரை காணவில்லை. மேலும் அவரை ப்ரியங்கா பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் ஏமாந்துவிட்டோடோமா? தன்னை பூவரசன் விட்டு சென்றுவிட்டோரோ என பிரியங்காவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

pregnant lady

இதனால் மனமுடைந்த அவர் கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று அழுதுகொண்டு  முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது அவரை கண்டு அங்கு விரைந்த அப்பகுதி மக்கள் பிரியங்காவை பிடித்துள்ளனர். பின்னர் அப்பகுதி போலீசாருக்கு தகவலளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பூவரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.