தமிழகம்

தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை.! என்ன காரணம்.?

Summary:

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா, தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர். இவர் சென்னை வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா (35). இவருக்கு இன்று பிறந்தநாள். இந்தநிலையில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதில் தமிழன் பிரசன்னாவுக்கும் அவரின் மனைவி நதியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நதியா அவரது வீட்டில் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நதியாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.  இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement