அஞ்சல் துறை தேர்வில் திடீரென தமிழ் நீக்கம்! அதிர்ச்சியடைந்த விண்ணப்பதாரர்கள்!

அஞ்சல் துறை தேர்வில் திடீரென தமிழ் நீக்கம்! அதிர்ச்சியடைந்த விண்ணப்பதாரர்கள்!



post office exam in hindhi and english


தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், அத்துடன் அடிப்படை கல்வியறிவாக கணினி தொடர்பான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டிருந்தது.

தபால் துறை தேர்வு இன்று நடைபெறும் நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருக்கும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்து உள்ளது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த தேர்வை எழுத தமிழகத்திலிருந்து ஏராளமான பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

post office

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், தபால் துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். ஆனால் தமிழே தெரியாத அவர்களைத் தமிழகத்தில் பணியமர்த்தினால் அவர்கள் தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து பணியாற்றுவார்கள்? இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது என பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. எனவே கடந்த தேர்வைப் போலவே மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.