தமிழகம்

தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பொங்கல் பரிசு நிச்சயம் - முதல்வர் அறிவிப்பு

Summary:

pongal prize for tamilnadu and srilanga tamil people

தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் முதல் நாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். தாங்கள் செய்யும் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் வருணபகவான் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசினால் ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு பொங்கல் பொருட்கள் இலவசமாக பொங்கல் பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய படம்

பொங்கல் பரிசானது தமிழகத்தைச் சார்ந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் குடியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


Advertisement