வாளோடு கல்வைத்து, வட்டமிட்டு செங்கல் பதித்து பொங்கல் வாழ்த்து.. என்னங்கடா இதெல்லாம்?..!Pongal Festival Celebration Kolam Tamil Read Issue

ஜனவரி 14 ஆம் தேதி, 15 ஆம் தேதி, 16 ஆம் தேதிகளில் உலகெங்கும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கும், மாட்டுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. 

தமிழ் மாதங்களின் படி தை மாதத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு, வீட்டு வாசலில் அழகிய கோலங்கள், மக்களின் கொண்டாட்டம் என எங்கும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இந்த நிலையில், பொங்கலை வரவேற்று வீட்டு வாசலில் போடப்பட்ட கோலம் வைரலாகி வருகிறது. 

இந்த கோலத்தில், பொங்கல் வாழ்த்துகள் என வித்தியாசமான முறையில் எழுதப்பட்டது கவனத்தை பெற்று வரவேற்பு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை பெற்று வருகிறது. "பொங்" என்ற எழுத்தை எழுதி, அதற்கு அடுத்தபடியாக செங்கலை வைத்துள்ளனர். இதனை படிக்கும் போது பொங்கல் என்று படிக்க வேண்டுமாம். 

அதனைப்போல, வாழ்த்துகளுக்கு வாள் போன்ற கத்தி புகைப்படத்தை வரைந்து, த்து எழுத்துக்களை எழுதி இறுதியில் செங்கலை வைத்துள்ளனர். இதனை வாழ்த்துகள் (வாள்த்துகல்) என்று சேர்த்து படிக்க வேண்டுமாம். இந்த கோலம் தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.