தமிழகம் காதல் – உறவுகள்

ரத்தவெள்ளத்தில் மிதந்த தாய்! தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸ்கார தந்தை!! தூங்கி எழுந்த மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

Summary:

policeman killed and suicided for family issue

புதுவண்ணாரப்பேட்டை காவல்  நிலையத்தில் பணியாற்றி வந்தவர் நரேஷ். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 7 வயதில் தருண் என்ற மகன் உள்ளான்.இவர்கள் பெரம்பூர் செம்பியத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நரேசுக்கு அதிகளவில் குடிப்பழக்கம் இருந்துள்ளது.அதனை ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். மேலும் அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதனைப் போலவே நேற்று காலையும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  கோபித்துக்கொண்டு ஜெயஸ்ரீ தனது மகனை அழைத்துகொண்டு தனது சகோதரர்  வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற நரேஷ் இனிமேல் தகராறு செய்ய மாட்டேன் என்று கூறி ஜெய ஸ்ரீயை சமாதானம் செய்துள்ளார்.பின்னர் தனது மகன் மற்றும் மனைவியுடன் புழல் திருமால் நகரில்உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். 

தொடர்புடைய படம்

பின்னர் இரவு மீண்டும்  அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நரேஷ் கத்தியால் ஜெயஸ்ரீயை சரமாரியாக குத்தியுள்ளார்.இதில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் நரேஷ் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ஜெயஸ்ரீயின் சகோதரர் சரவணன் ஜெயஸ்ரீ மற்றும்  நரேஷ்க்கு போன் செய்துள்ளார்  ஆனால் அவர்கள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவர் புழல் திருமால் நகரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். ஆண்டு கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சரவணன் உள்ளே பார்த்துள்ளார். அங்கு ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்திலும், நரேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளனர். மேலும் சிறுவன் தருண் தூங்கிக் கொண்டு இருந்துள்ளான்.

தொடர்புடைய படம்

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இருவரின் உடலை மீட்க்கு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement