தமிழகம்

சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர்! கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Summary:

police Suspended for facebook comment

சதீஷ் முத்து என்பவர் சென்னையில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் ஆவார்.இவர் தனது முகநூல் பக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் நிகழ்வு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்துள்ளார்.

ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பதிவிட்ட அப்பதிவானது காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும், சாத்தான்குளம் விவகாரத்தை நியாயப்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இவரது கமெண்ட் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது. இந்தநிலையில், சதீஷ் முத்து தனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், யாரோ தனக்கு தெரியாமல் கமெண்ட் செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில்  காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை  ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார்.


Advertisement