விதவை பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட போலீஸ் காவலர்! அவரது செல்போனை பார்த்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!police man cheate women

சென்னை அம்பத்தூரை அடுத்து பாடியைச் சேர்ந்த சுமலதா என்ற பெண் தனது கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், சென்னை வடபழனியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு, எஸ்.பி.சி.ஐ.டி. காவலரான செல்வகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில் சமீபத்தில் தனது இரண்டாவது கணவரின் செல்போனை பார்த்த அவர், அதில் பல பெண்களுடன் செல்வகுமார் நெருங்கிய தொடர்பில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சுமலதா புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், செல்வகுமார் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.