தமிழகம்

அடகுக்கடை உரிமையாளர் மனைவி கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

Summary:

அடகுக்கடை உரிமையாளர் மனைவி கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

அடகு கடை உரிமையாளரின் மனைவி மர்மநபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் பத்தேசந்த் (வயது 78). இவர் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேம்கவர் (வயது 70). தம்பதிகளுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு பத்தேசந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முதல் தளத்தில் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில், இறந்து கிடந்ததை கண்டு பதறிப்போன பத்தேசந்த், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த பிரேம்கவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

அத்துடன் கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரேம்கவர் 'எதற்காக? யாரால்? எப்பொழுது கொலை செய்யப்பட்டார்?' என விசாரித்து வருகின்றனர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement