மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
குழந்தைகளுடன் கொடூரமாக இறந்துகிடந்த தாய்... மாயமான கணவருக்கு வலைவீச்சு... திருப்பூரில் பயங்கரம்..!
மர்மமான முறையில் குழந்தைகளுடன் தாய் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் வாவிபாளையம் அதே பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அங்கு அடிக்கடி முத்துமாரிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை நெடுநேரமாகியும் முத்துமாரி வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.
சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முத்துமாரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனால் காவல் துறையினரிடம் அக்கம்பக்கத்தினர் புகாரளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முத்துமாரி மற்றும் அவரது குழந்தைகளின் இறப்பிற்கு அவரது கணவர் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர், மாயமான கணவரை தேடிய வண்ணம் இருக்கின்றனர்.