காதலிக்க மறுத்தால் ஆத்திரம்.. தீ வைத்து கொளுத்தியில் ஒன்றோடு நான்காக நடந்த பயங்கரம்.!
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வாகனத்தை இளைஞர் ஒருவர் தீ வைத்து கொளுத்தியதில், அருகிலிருந்த 4 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள தெப்பகுளம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த 5 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் புகைமூட்டம் ஏற்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்க்கும்போது வாகனங்கள் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது இருவர் வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் ஜெயசூர்யா மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது ஜெயசூர்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததும், மாணவி காதலை ஏற்க மறுத்ததால் அவரது இருசக்கர வாகனத்தை கொளுத்தியதும் தெரியவந்தது.
அத்துடன் மாணவியின் வாகனத்திலிருந்து தீ அருகாமையில் நின்றிருந்த வாகனங்களிலும் பரவியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜெயசூர்யா உண்மையை ஒப்புகொண்டதால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement