தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.! அதிர்ச்சி காரணம்.!

தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.! அதிர்ச்சி காரணம்.!


police inspector suicide attempt

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நீலாவதி என்பவர் கடந்த 7 மாதங்களாக ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஈரோடு சூரம்பட்டி வலசு காந்திஜி வீதியில்  வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் லீலாவதி அவருடைய செல்போனில் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது குழந்தைகளை பாதுகாக்குமாறும் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். பின்னர் தோழியின் வீட்டிற்கு சென்ற நீலாவதி அங்கு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இன்ஸ்பெக்டர் நீலாவதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், உயர் போலீஸ் அதிகாரி வாக்கி டாக்கியில் கடுமையாக திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை தான்.

எனது இந்த முடிவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரியும் மற்றும் ஒரு போலீஸ் ஏட்டும் தான் காரணம். பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் சமுதாய ரீதியில் அரசியல் செய்கிறார். அந்த ஏட்டுவை ஒரு முறை நான் திட்டியதால் என்னை பழிவாங்குவதற்காக தவறான தகவலை அதிகாரிகளிடம் சொல்லி வருகிறார். இவர்களின் செயலால் தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்துள்ளார்.