தமிழகம்

பெண் தீக்குளிப்பதை தடுக்காமல் வீடியோ எடுத்த கொடூர சம்பவம்! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

Summary:

Police have arrested the man who took the video without stopping the woman arson


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கே.சி.பட்டியில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தடுக்காமல் அதை முழுவதுமாக வீடியோவாக எடுத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கே.சி.பட்டியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணிற்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சதீஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு காதல் உருவாகியுள்ளது. இவர்களுடைய காதலுக்கு சதீஷின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வர இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பாக சதீஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி தனது மகனுடன் தன்னுடைய காதலன் வீட்டிற்கு முன் நின்று நியாயம் கேட்டுப் போராடினார். அப்போது, அவர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானத்தில் அழுதபடி தனது மகனை கடையில் அமரவைத்துவிட்டு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை யாரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்ததுடன் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் ஒரு பெண் தீக்குளிக்க முயற்சிக்கும் போது அதனை யாரும் தடுக்காமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களுக்கு ஆளானது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவரை கைது செய்த நிலையில், காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த ச‌ர‌வ‌ண‌குமார் என்ப‌வ‌ரையும்  போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement