தமிழகம்

அடேங்கப்பா..! இது செம ட்விஸ்ட்டால்ல இருக்கு..!! ஓட்டுக்காக போலீசுக்கே பணம் கொடுத்த போலீஸ்..

Summary:

தபால் ஓட்டுக்காக போலீசாருக்கு போலீசாரே பணம் கொடுத்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்ப

தபால் ஓட்டுக்காக போலீசாருக்கு போலீசாரே பணம் கொடுத்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் தேர்தலை அடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேநேரம் ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணம், பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் கைபற்றிவருகின்றனர்.

இந்நிலையில் தபால் ஓட்டுக்காக போலீசாருக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த ரூ.70 ஆயிரத்தை கமிஷனர் பறிமுதல் செய்தார். திருச்சி தில்லை நகர் மற்றும் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போலீஸ் கமிஷனர் லோகநாதன், தபால் ஓட்டு போடும் போலீசாருக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த 35 கவர்களில் இருந்து, 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தி.மு.க., தரப்பில் இருந்து, போலீஸ்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனி குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement