தலைக்கேறிய போதை.! போலீசார் மீது காரை விட்டு ஏற்ற முயன்ற நபர்.! விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்.!

தலைக்கேறிய போதை.! போலீசார் மீது காரை விட்டு ஏற்ற முயன்ற நபர்.! விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்.!



police caught drunken drive car

தமிழகத்தில் ஆரம்பத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்காணிப்பதற்காக நேற்று பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து நேற்று காலை பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

போரூர் நான்கு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், முகலிவாக்கத்தில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தும்படி கூறினர். ஆனால் அந்த காரை ஓட்டி வந்த வாலிபர், போலீசார் மீது மோதுவதுபோல் வந்து, காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். உடனடியாக போலீசார், இதனையடுத்துள்ள பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அந்த காரை பிடிப்பதற்கு தயாராக நின்ற போலீசார், அந்த காரை மடக்கி பிடித்தனர். காருக்குள் இருந்த வாலிபரை வெளியே அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர், குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பெயர் மைக்கேல் எனவும், தனது குடும்ப பிரச்சினை காரணமாக இதுபோல் வேகமாக வந்ததாகவும் கூறினார்.

மேலும் தன் மீது வழக்கு போட்டுக்கொள்ளுங்கள், காரையும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் தனக்கு அவசரமாக ரூ.1 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அதை தாருங்கள் என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மைக்கேல். இதனையடுத்து அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.