கோவில் திருவிழாவில் கேடித்தனம் செய்வதே பிழைப்பு.. கேடி குடும்பம் கூண்டோடு கைது..! இலங்கையில் இருந்து வந்து பயங்கரம்.!

கோவில் திருவிழாவில் கேடித்தனம் செய்வதே பிழைப்பு.. கேடி குடும்பம் கூண்டோடு கைது..! இலங்கையில் இருந்து வந்து பயங்கரம்.!


police arrested the family for thieft

கோயம்புத்தூரில் உள்ள கோவில் திருவிழாக்களில் பெண்களின் கழுத்தில் உள்ள நகைகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில் நகை திருட்டில் ஈடுபடுவது ஒரு கும்பலாக இருக்கலாம் என்று நினைத்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ய சிறப்பு தனிப்படையை உருவாக்கினர். 

இந்த தனிப்படையினர் சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது திருவிழா நடந்த இடத்திற்கு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரின் எண்ணை வைத்து தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமு, ராமுவின் மனைவி நாகம்மாள், இந்த தம்பதியின் மகன் சத்யா ஆகியோரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். 

அப்போது ஊரில் பக்திமானாக வளம்வந்த குடும்பம், குடும்பத்துடன் திருவிழாக்களில் நகை திருட்டில் ஈடுபட்டுவந்தது அம்பலமானது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் பொள்ளாச்சி, கும்பகோணம், பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து இந்த திருட்டு செயலை அரங்கேற்றி வந்ததும் உறுதியானது. 

tamilnadu

சத்யாவின் மனைவி நந்தினி, மாமியார் நாகம்மாளுடன் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் ஏறி நகை மற்றும் பணங்களை திருடுவதுமாக இருந்துள்ளார். கேரளாவில் கைவரிசை காட்டிய சமயத்தில் நந்தினி சிக்கிக் கொள்ள, எர்ணாகுளம் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறாக கொள்ளையடித்த பணத்தை வைத்து கோயம்புத்தூரில் சொந்தமாக வீடு வாங்கிய கேடி குடும்பத்தினர், அவ்வப்போது சிங்கப்பூர் மற்றும் மலேசியா, அரபு நாடுகளுக்கு இன்பச்சுற்றுலாவும் சென்றது தெரியவந்தது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.