"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
"என் ஆளு மேலயே கைய வைப்பியா.." காதலியின் தந்தை மீது தாக்குதல்.!! ரவுடி உட்பட இருவர் கைது.!!
திருச்சி அருகே காதல் விவகாரம் தொடர்பாக இளம் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடியுடன் காதல்
திருச்சி ஏஆர்எம் காலனி பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வகுமார். இவர் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணும் ரவுடியை காதலித்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரத்திற்கு இளம் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் காதல் விவகாரம் தொடர்பாக இளம் பெண்ணின் தந்தை அந்தப் பெண்ணை கண்டித்ததாகவும் தெரிகிறது.
தந்தை மற்றும் சகோதரி மீது தாக்குதல்
தனது தந்தை கண்டித்தது குறித்து இளம்பெண் தனது காதலன் செல்வக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ரவுடி செல்வகுமார், தனது கூட்டாளியான அந்தோணி என்பவருடன் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் சகோதரியை தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வாழ்வே மாயம்... ரூம் போட்டு தற்கொலை.!! புது மாப்பிளைக்கு நேர்ந்த சோக முடிவு.!!
ரவுடி மற்றும் கூட்டாளியை கைது செய்த காவல்துறை
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் ரவுடி செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளியான அந்தோணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் விவகாரத்தில் இளம் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரி தாக்கப்பட்ட சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "தாத்தா சாக்லேட் வாங்கி தரேன்.." 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பெண் உட்பட இருவர் கைது.!!