தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!Physical Challenger women death in Salem

எடப்பாடி அருகே தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குறுக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பெருமாயி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் உடல் நலக்குறைவால் காலமானார்.

Salem

இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருந்த நிலையில், அவருக்கு திருமணமாகிவிட்டது. தற்போது பெருமாயி மற்றும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பெருமாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெருமாயின் உடலை கைப்பற்றி எடப்பாடி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Salem

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் முன் விரோத தகராறு அல்லது தகாத உறவால் நடந்ததா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.