தமிழகம்

கொரோனா சமயத்திலும் தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் விலை!

Summary:

petrol price increased

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து அவ்வளவாக இல்லயென்றாலும், பெட்ரோல் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மாதம் இரண்டு முறை மட்டும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. பின்னர் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து ரூ.84.82க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.78.86 என்ற விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement