தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல் விலையை பார்த்தீர்களா.! கடும் வேதனையில் பொதுமக்கள்.!

தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல் விலையை பார்த்தீர்களா.! கடும் வேதனையில் பொதுமக்கள்.!



petrol-diesel-price-increased-T52RZ5

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த வருடத்தில் பெட்ரோல் விலை உச்சகட்டமாக உயர்ந்து பொதுமக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை பலரும் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து வந்தனர். 

மேலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

petrol

இதன்படி பெட்ரோல் விலை, நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.55 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.