இன்று அதிகரித்த பெட்ரோல் டீசல் விலையால் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

இன்று அதிகரித்த பெட்ரோல் டீசல் விலையால் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!


petrol diesel price increased.


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

petrol diesel
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.70 க்கும், டீசல் நேற்றைய விலையில்  இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.84 ஆகவும் விற்கப்படுகிறது. இன்று திடீரென பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.