தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!


petrol diesel price increased

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிரனயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. 

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய  வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட  ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

petrol

இந்தநிலையில் ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஒருவாரத்தில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் உள்ளது. 

பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்தநிலையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85ஆகவும் உள்ளது.