
petrol diesel price increased
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றங்களை சந்தித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 14-வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.81.82க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் அதிகரித்து ரூ.74.77க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று மீண்டும் 14 நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 45 காசுகள் அதிகரித்து ரூ. 82.27க்கு விற்பனை ஆகிறது, அதேபோல டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 52 காசுகள் அதிகரித்து ரூ.75.29க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement