வேலைக்கு ஆட்கள் வைத்து கள்ளச்சாராய விற்பனை.. அதிர்ச்சியை தந்த பகீர் தகவல்.!
கூலி தொழிலாளிகளை வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் யாருக்கும் தெரியாமல் ஒரு கும்பல் கள்ளசாராயம் விற்பனை செய்து வந்துள்ளது. அவர்கள் தினக்கூலி தொழிலாளிகளை வைத்து சிறு சிறு பாக்கெட்டுகளில் கள்ளசாராயத்தை அடைத்து சாராய பொட்டலங்கள் விற்பனை செய்துள்ளனர்.
அத்துடன் இது ஊர் மக்களுக்கு தெரியவர, எம்.பி.குப்பம், கூத்தாண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக சாராய பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து காவல்துறையினரிடம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது தொழிலாளிகள் சிறு சிறு பாக்கெட்டுகளில் கள்ளசாராயத்தை நிரப்பி சாராய பொட்டலங்கள் தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Advertisement
Advertisement