நாடெங்கும் ஊரடங்கு! சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாடெங்கும் ஊரடங்கு! சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!


permission-allowed-for-food-delievery-in-chennai

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ்  தற்போது உலகெங்கும் 180 நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் பரவிய இந்த கொடிய வைரஸால்  இதுவரை 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தமிழகத்திலும் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மின்னல் வேகத்தில் பரவிவரும் கொரோனோவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

online

இந்நிலையில் மக்களின் பசியைப் போக்குவதற்காக சென்னையில் ஆன்லைன் உணவு  நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமைட்டோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உணவு டெலிவரி செய்ய சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மேலும் உணவு டெலிவரி செய்பவர்கள் மாஸ்க், கையுறை போன்றவற்றை கட்டாயமாக அணிந்துகொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.