கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
பதறவைக்கும் சம்பவம்.!! வீட்டு வாசலில் மனித உருவம் வரைந்த முட்டை.. ஒரு கிராமமே பயங்கர பீதியில் இருக்கும் பரபரப்பு சம்பவம்..

முட்டையில் படம் வரைந்து வீட்டு வாசலில் போட்டுச்செல்வதால் கிராம மக்கள் அச்சமடையும் சம்பவம் திருவள்ளூர் அருகே நடந்துவருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொன்பாடி சோதனைச்சாவடி அருகில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர்கள் தக்ஷிணாமூர்த்தி - பொன்னியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, பொற்கொடி என்ற இரு மகள்களும், வினோத் குமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு அம்மாவாசை அன்று இரவும் தக்ஷிணாமூர்த்தியின் வீட்டு வாசல் முன்பு முட்டையில் மனித உருவத்தை வரைந்து, அதில் மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை தடவி மாந்த்ரீக முட்டை ஒன்றை யாரோ வைத்து சென்றுள்ளனர். இப்படி மாந்த்ரீக முட்டை வைக்கப்பட்டதில் இருந்து தக்ஷிணாமூர்த்தியின் வீட்டில் உள்ள அனைவரும் உடல்நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் ஒருமுறை அந்த மாந்த்ரீக முட்டையை தொட்ட தக்ஷிணாமூர்த்தியின் மூத்த மகள் சுஜாதா உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறுகின்றனர். உடலில் எந்த ஒரு குறையும், நோய் நொடியும் இல்லாத சுஜாதா எப்படி இறந்தார்? இந்த மாந்த்ரீக முட்டைதான் காரணம் என தக்ஷிணாமூர்த்தி உட்பட அந்த கிராமத்து மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.
தற்போது தக்ஷிணாமூர்த்தியின் வீட்டில் வைத்ததுபோன்றே அதே கிராமத்தில் வேறு சிலர் வீட்டின் முன்பும் இதுபோன்ற மாந்த்ரீக முட்டை வைக்கப்பட்டுவருகிறது. இதனால் அந்த வீடுகளில் உள்ள மக்கள் உடல்நல கோளாறுகளை சந்தித்துவருவதாகவும், இதுபோன்ற சம்பவத்தால் அந்த ஊரில் இருக்கவே பயப்படுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர் அந்த பகுதி மக்கள்.