மூதாட்டியின் கையில் சிக்கிய 6 அடி நீள பாம்பு.! மின்னல் வேகத்தில் மூதாட்டி செய்த காரியம்..! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

மூதாட்டியின் கையில் சிக்கிய 6 அடி நீள பாம்பு.! மின்னல் வேகத்தில் மூதாட்டி செய்த காரியம்..!

மூதாட்டி ஒருவர் துளியும் பயமின்றி 6 அடி நீள ராட்ச பாம்பை தனது கையில் பிடித்து இழுத்து வந்து மின்னல் வேகத்தில் தூக்கி எரியும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வயதான மூதாட்டி ஒருவர் மனதில் துளியும் பயமின்றி 6 அடி நீள ராட்ச பாம்பை தரதரவென இழுத்து வருகிறார் அந்த பாம்பும் என செய்வது என்று தெரியாமல் திணறுகிறது.

அந்த பாம்பை மின்னல் வேகத்தில் இழுத்து வந்த பாட்டி சிறிது தூரம் சென்று தூக்கி எறிகிறார். இந்த வீடியோவை பதிவிட்ட சுசந்தா நந்தா பாட்டி அந்த பாம்பை நடத்தும் முறை இதுவல்ல என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo