உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி: பட்டாசு ஆலைகள் காலவரையறையின்றி மூடப்படுவதாக சங்கம் அறிவிப்பு.!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி: பட்டாசு ஆலைகள் காலவரையறையின்றி மூடப்படுவதாக சங்கம் அறிவிப்பு.!


pattasu-factory-association-sivakasi

தீபாவளியை முன்னிட்டு நிபந்தனையுடன் கூடிய தீர்ப்பினை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பட்டாசு உரிமையாளர் சங்கம் காலவரையின்றி வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.

தீபாவளி என்றாலே சிறப்பு பட்டாசுதான். பட்டாசு என்றாலே சிறப்பு சிவகாசி தான். ஏனென்றால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பட்டாசு தயாரிக்கும் தொழிலையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

tamilspark

ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடும் தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் இவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து அபாயகரமான தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தொழிலில் போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலாக செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க தடை விதித்ததோடு, சில நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்தது. அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

tamilspark

இதற்கிடையில், தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாசு ஆலைகள் இயங்கும் நிலையில், திடீரென்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையறை இன்றி மூடப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

எனினும், பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், சிவகாசி பட்டாசு ஆலைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் இயங்கி வரும் சுமார் 1,400 பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படும் என்று உற்பத்தியாளார்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.