பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
தேவாலயத்திற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பாதிரியார் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையை சேர்ந்த 14 வயது சிறுமி ஆற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் அருகில் உள்ள தேவாலயத்துக்கு செல்வது வழக்கம். அதன்படி சிறுமி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேவாரத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது பாதிரியார் ரகுராஜ்குமார் என்பவர் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் யாரிடமாவது என்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் சிறுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது, சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாதிரியார் ரகுராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.