தமிழகம் சினிமா Covid-19

எனக்கே ஆறுதல் தேவை.. பிரபலத்தின் மறைவால் மீளா துயரில் நடிகர் பார்த்திபன்.!

Summary:

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் என்ற ஊரில் பிறந்தவர் ஓவியர் இளையராஜா. இவரின் ஓவியங்கள் உலக

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் என்ற ஊரில் பிறந்தவர் ஓவியர் இளையராஜா. இவரின் ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ் பெற்றன. இவருக்கு பல விருதுகளும், அங்கீகாரங்களும் கிடைத்தது. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இளையராஜா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு முழுவதுமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று இரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக இளையராஜா காலமானார்.

ஓவியர் இளையராஜா மறைவு குறித்து நடிகர் பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "நண்பன்/அன்புத் தம்பி ஓவியர் இளையராஜா மறைவு, மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி?" என பதிவிட்டுள்ளார்.


Advertisement