ஆத்தாடி.. பாம்பு தோலுடன் பரோட்டா பார்சல்! பிரித்த பெண்ணிற்கு காத்திருந்த ஷாக்! பகீர் சம்பவம்!!

ஆத்தாடி.. பாம்பு தோலுடன் பரோட்டா பார்சல்! பிரித்த பெண்ணிற்கு காத்திருந்த ஷாக்! பகீர் சம்பவம்!!


parotta-parcelled-by-snake-skin-in-hotel-shock-news

திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து புரோட்டா வாங்கிவந்த பார்சலில் பாம்பு தோல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பிரியா. இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா வாங்கியுள்ளார். பின்னர் அதனை வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட பிரித்துள்ளார். அப்பொழுது பார்சல் கட்டியிருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்துள்ளது.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று புரோட்டா பார்சலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பின்னர் அந்த உணவகத்திற்கும் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

snake

பின்னர் உணவு பொருட்களை விநியோகம் செய்வதில் அலட்சியம், முறையான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டபட்டு அந்த உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.