தமிழகம்

2 வருடங்களுக்கு முன் காணமல் போன சிறுமி.! கைக்குழந்தையுடன் பெற்றோர் பார்த்த அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

தமிழக எல்லையில் உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா கிராமத்தில் பெற்றோருடன்

தமிழக எல்லையில் உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா கிராமத்தில் பெற்றோருடன் கேட்டரிங் தொழில் செய்து வந்த 14 வயது சிறுமியை செல்வம் என்ற 20 வயது இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்த சிறுமியை செல்வம் கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்றுவிட்டார்.

இதனையடுத்து சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், காணமல் போன சிறுமி மதுரையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மதுரைக்கு விரைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி நான்கு மாத கைக்குழந்தையுடன் இருந்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் செல்வமும், இந்த சிறுமியும், கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அங்கு வருவதை அறிந்த செல்வம் தலைமறைவானார். இதனையடுத்து சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மைனர் பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்து, தற்போது அந்த சிறுமிக்கு நான்கு மாத குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் போலீசார் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள செல்வதை தேடி வருகின்றனர்.


Advertisement