பரிசோதனைக்கு பின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு.! என்ன காரணம்.!

பரிசோதனைக்கு பின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு.! என்ன காரணம்.!


Parents refuse to buy body after post-mortem

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் 'சேக்ரட் ஹார்ட்' பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில், திருத்தணியை அடுத்த சூரியநகரம் தெக்கனூர் காலனியை சேர்ந்த சரளா என்ற சிறுமி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில், மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் தெரிந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என மாணவியின் உறவினர்கள் கோஷமிடுகின்றனர்.