தமிழகம் Womens day 2020

பெண் பிள்ளை பிறந்தது ஒரு குற்றமா..? பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் கள்ளிப்பால் ஊற்றி கொன்ற பெற்றோர்.!

Summary:

parents killed female baby

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகனுக்கு சௌமியா என்ற பெண்ணுடன் திருமணமாகி, இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சௌமியாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை கடந்த 2ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறி பெற்றோர் குழந்தையை வீட்டின் முன் புதைத்துள்ளனர். இதுகுறித்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கூறிஉள்ளார் இதனால் சந்தேகமடைந்த அவர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் குழந்தையின் பெற்றோர் வைரமுருகன், சௌமியா, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை, பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து புதைத்துள்ளது தெரியவந்தது. 

இதனையடுத்து புதைக்கப்பட்ட பெண் குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர். இதில் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களின் பெருமை குறித்தும் உலகமே பேசிவரும் நிலையில் பெண்குழந்தை பிறந்ததால் பெற்றோர் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement