பாவம்.. யாருக்கும் இப்படி நடக்க கூடாது.. குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம்.. பின்னால் உள்ள அதிர்ச்சி காரணம்..



Parents killed children and commit suicide near Nagarcoil

பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள சுண்டபட்டிவிலை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணம் முடிந்து சரஸ்வதி என்ற மனைவியும், அனுஷ்கா என்ற 10 வயது மகளும், விகாஸ் என்ற நான்கு வயது மகனும் உள்ளனர்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கண்ணன் தச்சுவேலை பார்த்து தனது குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இந்நிலையில் அவரது 4 வயது மகன் விகாசிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டு அதனால் குழந்தை கடும் சிரமத்தை சந்தித்துவந்துள்ளது. இதனால் குழந்தைக்கு வலிப்பு நோய் வரும்போதெல்லாம் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லமுடியாமல் குழந்தை கவனித்துவந்துள்ளனர்.

இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் சம்பாதிக்கும் பணமெல்லாம் குழந்தையின் மருத்துவ செலவுக்கே போதுமானதாக இல்லை. மேலும் பல்வேறு சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைக்கு நோய் சரியானபாடும் இல்லை.

இதனால் மொத்த குடும்பத்தினரும் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுபோக கடன் சுமை வேறு. இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற கண்ணன் - சரஸ்வதி தம்பதியினர் ஒரு கொடூரமான முடிவை எடுத்தனர். அதன்படி, குழந்தை அனுஸ்கா மற்றும் விகாஷ் இருவருக்கும் விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் சரஸ்வதியும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இவர்களை அடுத்து கண்ணன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மறுநாள் காலை நீண்டநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, கண்ணன், கண்ணனின் மனைவி சரஸ்வதி, மகள் அனுஷ்கா, மகன் விகாஸ் ஆகிய நான்குபேரும் சடலமாகக் கிடப்பதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நால்வரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தம்பதியினர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், "தங்களது சாவிற்கு யாரும் காரணமில்லை என்றும், மகனின் வலிப்பு நோயால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.". குழந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.