மகன்களை இழந்த துக்கத்தால் பரிதாபம்.. பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்.!



parents-committed-suicide-after-their-son-suicide

தங்களது இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்ட துக்கத்தில், பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டையில் வசித்து வந்தவர்கள் பன்னீர்செல்வம்- குணசுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு ரமேஷ், விக்னேஷ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக விக்னேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து ரமேஷுக்கு திருமணமாகிய, நிலையில் ஒரு குழந்தை இருக்கிறது. தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட விபத்தில், ரமேஷுக்கு தலையில் பலமாக அடிபட்டு புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

Ranipet

மேலும், சம்பவத்தன்று ரமேஷின் மனைவி இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என கோபத்துடன் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மிகவும் மன விரக்தியடைந்த ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகன்கள் இருவரும் இறந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

பின் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.