அரசியல் தமிழகம்

அட!! ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு இவருமா வந்தாரு?? முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டவர்கள் யார் யார் தெரியுமா??

Summary:

ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றார்.

ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார். கொரோனா காரணமாக பதவியேற்பு விழா மிக எளிமையாக நடத்தப்பட்டது.

இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு மிகக்குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோருக்கும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் டிடிவி தினகரன், கமல்ஹாசன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் புதிய அரசியல் நாகரிகமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். அவருடன் தனபால் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனும் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்றார். பாஜக சார்பில் இல.கணேசன் ஆகியோர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.


Advertisement