அரசியல் தமிழகம் இந்தியா

வயசாகிவிட்டது ஜெயில் உணவு வேண்டாம், வீட்டு சாப்பாடு கேட்ட சிதம்பரத்திற்கு செக்!

Summary:

only jaill food foe p chidhambaram


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காவல் முடிந்து தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. 

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிறையில் இருக்கும் சிதம்பரத்தை ஒரே வாரத்தில் இருமுறை அவர்களது குடும்பத்தினர் சந்தித்துள்ளனர் என்றும், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில், அவருக்கு பிணை வழங்கக்‌கூடாது என்றும் வாதிட்டார். 

அவரது வாதத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 7 நாட்களில் வழக்கின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

ஜாமீன் மனு விசாரணையின் போது ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது என வயது முதுமையை சுட்டிக்காட்டி ப.சிதம்பரத்திற்கு வீட்டில் இருந்து உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அது தான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தது.


Advertisement