ஆன்லைன் சூதாட்டம் தடை.! அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்.!

ஆன்லைன் சூதாட்டம் தடை.! அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்.!



Online gambling சூத்தடம் ban

ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்

ஆன்லைன் ரம்மி காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட இளைஞர் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

 ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், அக்டோபர் 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமே இது தொடர்பாக நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அதை முதல்வரே கொண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.