ஆன்லைன் வேலை... இரட்டிப்பு லாபம்... இளைஞரிடம் 12 லட்சம் ஸ்வாஹா... 2 பேர் கைது.!



onlibe-job-scam-12-lakhs-looted-from-youth-police-arres

ஆன்லைன் பகுதி நேர வேலை, முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்புலாபம் எனக் கூறி சென்னையைச் சேர்ந்த இளைஞரிடம் 12 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த இளைஞரை தொடர்பு கொண்ட இந்த கும்பல் யூடியூப் வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களுக்கு லைக் செய்ய வேண்டும், மேலும் ஹோட்டல்களுக்கு ரிவியூ எழுத வேண்டும் என எளிதான டாஸ்க்களை கொடுத்து முதலில்  செலுத்திய பணத்திற்கு இரட்டிப்பு லாபம் வழங்கி இருக்கிறது இந்த மோசடி கும்பல். இதனை நம்பி அந்த இளைஞர் 12 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார். அதன் பிறகு அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கவில்லை அவர் செய்த முதலீடு பணமும் திரும்ப வரவில்லை .

tamilnaduஇதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அந்த இளைஞர்  ஹாங்காங் நாட்டைச் சார்ந்த கும்பலால் ஏமாற்றப்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

tamilnaduசென்னை மணலியைச் சேர்ந்த முகமது இலியாஸ் என்பவருக்கு 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அவரது பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி இருக்கின்றனர். மேலும் அந்த வங்கிக் கணக்கை தமிழ்ச்செல்வன் என்பவரிடம் கொடுக்க வைத்து அந்தப் போலி கணக்கில்  அடையாறு பகுதியைச் சேர்ந்த இளைஞரை பணம் செலுத்த வைத்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த முகமது இல்யாஸ் மற்றும் தமிழ்செல்வம் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் தலைமறைவாக இருக்கும் ஹாங்காங் கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகிறது.