சரசரவென சரிந்த வெங்காயத்தின் விலை.. பெரும் மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

சரசரவென சரிந்த வெங்காயத்தின் விலை.. பெரும் மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!



Onion price decrease in tamilnadu

கடந்த சில மாதமாகவே வெங்காயத்தின் விளைச்சலானது குறைந்திருந்த நிலையில், வெங்காயம் கிலோ ரூ.100 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் வெங்காயத்தின் விளைச்சல் தற்போது கோடைகாலத்தை எட்டி இருப்பதால் அது சாதாரணமாக உள்ளது.

இதனால் வெங்காயத்தின் விலை அடுத்தடுத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. பெரிய வெங்காயத்தை பொருத்தவரையில் அதை கிலோ ரூ.5-க்கும், சின்ன வெங்காயத்தைப் பொறுத்தளவில் ரூ.15-க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

tamilnadu news

இவை சந்தைகளில் விற்பனைக்கு வரும்போது பெரிய வெங்காயம் ரூ.8-க்கும், சின்ன வெங்காயம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லரை சந்தைகளில் பெரிய வெங்காயம் ரூ.15-க்கும், சின்ன வெங்காயம் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.