தமிழகம்

10 வது பாஸ், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Summary:

ONGC job for diploma candidates

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதற்கான தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 422 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2019 ஜனவரி 01 ஆகும்.

மொத்த காலியிடங்கள் : 422 
வயது வரம்பு : வேலைக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி மற்றும் இதரத் தகுதிகள் : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் ,பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளமோ பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும்  வேதியியல் முதுகலை முடித்தவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.ongcindia.com என்னும்  இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : OC மற்றும் BC : ரூ.370. SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.01.2019  

மேலும் விவரங்களுக்கு: https://www.ongcindia.com/wps/wcm/connect/03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d/detailed_04mumbai.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d-mu6VfWS
 


Advertisement