BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
விடா முயற்சி வெற்றி தரும்....! நீட் தேர்வில் சாதனை படைத்த விவசாயின் மகள்...!
நாகை மாவட்டம் ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் - பவானி தம்பதியினர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குமார் விவசாயம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகள் ராஜேஸ்வரி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பயின்று வந்தவர்.
பொதுவாக கிராமப்புறங்களில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இருப்பினும் அரசு பள்ளியில் பயின்று தனது விடாமுயற்சியால் நீட் தேர்வுக்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார் ராஜேஸ்வரி.

அவரது விடாமுயற்சியின் பலனாக நீட் தேர்வில் வெற்றி கண்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.அதற்காக ராஜேஸ்வரியின் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களின் சார்பாக ராஜேஸ்வரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அவருக்கு மாலையும்,நிதி உதவியும் வழங்கப்பட்டது.