தமிழகம்

கொரோனாவை வென்றவருக்கு மனைவியால் ஏற்பட்ட சோகம்..

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி புரிந்து வருபவர் துரை. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை எடுத்து வர மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பி உள்ளார்.

அதனை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா சிகிச்சைகள் முடிந்து குணமாகி கடந்த 26 ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் துரையின் மனைவி தனது பிள்ளைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். துரை சென்று மனைவியை வீட்டிற்கு அழைத்தும் கொரோனா பயத்தில் வர மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement