#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
கஞ்சா போதையில் பெற்ற தாயை கொலை செய்து வீட்டில் புதைத்த மகன்... போலீசார் விசாரணை!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் - கஸ்தூரி தம்பதியினர். கஞ்சா போதைக்கு அடிமையான இவர்களது இளைய மகன் சேவாக்(21) நேற்று கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்து பெற்ற தாய் என்று கூட பாராமல் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வீட்டிலேயே குழி தோண்டி புதைத்து விட்டு உறவினர்கள் வீட்டில் போய் தங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் கஸ்தூரியை காணாததால் அவரது உறவினர்கள் சேவாக்கிற்கு போன் செய்து தாயை காணவில்லை என விசாரித்துள்ளனர். ஆனால் சேவாக் முன்னுக்கு பிறனான பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கஸ்தூரியின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
அங்கிருந்த பாயில் இரத்தக்கறை இருந்துள்ளது. மேலும் வீட்டில் உள் பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்த தடயம் இருந்துள்ளது. இதனை வைத்து சந்தேகமடைந்த உறவினர்கள் உடனே அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சேவாக்கை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.