நள்ளிரவில் நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த சொகுசு பேருந்து... 10 பயணிகள் காயம்... சேலம் அருகே பரபரப்பு!!

நள்ளிரவில் நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த சொகுசு பேருந்து... 10 பயணிகள் காயம்... சேலம் அருகே பரபரப்பு!!


omni-bus-fired-in-near-by-selam-10-members-injured

கோவையிலிருந்து சொகுசு பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றி கொண்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை சரியாக 1 மணி அளவில் கடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுனர் உடனே நடுரோட்டில் பஸ்ஸை அப்படியே திருந்தி விட்டு உள் இருந்த பயணிகளை கீழ் இறங்கும் படி கூறியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் பாதி பேர் இறங்குவதற்குள் பஸ் முழுவதுமாக தீ பிடித்து எரிந்துள்ளது. அதில் சில பயணிகளுக்கு லேசான தீ காயம் ஏற்பட்டது.

selam

இச்சம்பவம் குறித்து மேட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் மற்றும் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தீ காயம் அடைந்த 10 பேர் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.