தமிழகம் Covid-19

மக்களே உஷார்.!! தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எத்தனைபேர் தடுப்பூசி போட்டவர்கள் தெரியுமா..!

Summary:

மக்களே உஷார்.!! தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எத்தனைபேர் தடுப்பூசி போட்டவர்கள் தெரியுமா..!

உலகத்தையே உலுக்கிய கொரோனாவை எதிர்த்து அனைத்து நாடுகளும் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இன்றளவு நீங்காமல் உள்ளது. இந்நிலையில்தான் ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.

ஒமைக்ரான் அச்சுறுத்தலையொட்டி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனைத்து விமான நிலையத்தில் இருந்தும்  விடுவிக்கப்படுகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 33 பேரில் இரண்டு பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற 31 பேரும் 2 தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.


Advertisement