சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் கொடுத்த ஷாக் தகவல்.!

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் கொடுத்த ஷாக் தகவல்.!


NTK members join in DMK

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. 

இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் பலர், அக்கட்சியில் என்ன நடக்கிறது, எதற்காக அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்தோம் என்பது குறித்து பேசியுள்ளனர்.

சாமிப்பதில், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பில் இருந்த 500 பேர் விலகி திமுக-வில் இணைந்தனர். ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், திமுக-வில் இணைந்த அவர்கள் பிரபல தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேசுகையில், கட்சியின் கொள்கை மாறிவிட்டது, அவர்கள் சொல்வது தான் வேட்பாளர், நாங்கள் சொல்வதை எதுவும் கேட்பதில்லை. தற்போது பணம் வைத்திருப்பவர்கள், ஜாதி போன்றவை எல்லாம் வந்துவிட்டது இதனால் தான் வெளியே வந்தோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.