மறு பிரேத பரிசோதனைக்கு பின் யாருமில்லாத மாணவி ஸ்ரீமதி வீட்டில் ஏற்பட்ட பரபரப்பு.!

மறு பிரேத பரிசோதனைக்கு பின் யாருமில்லாத மாணவி ஸ்ரீமதி வீட்டில் ஏற்பட்ட பரபரப்பு.!


notice in srimathi home

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்தது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரீமதியின் உடலுக்கு நேற்று மீண்டும் விழுப்புரம், திருச்சி, சேலம் ஆகிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் மாணவி உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்க வராததால், வட்டாட்சியர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் நோட்டீஸ் வழங்கி, கையெழுத்து வாங்கி சென்றனர்.