தமிழகம்

உடல் முழுவதும் மறைந்து இருந்த 100 டி-ஷர்ட்..! கையும் களவுமாக பிடித்த செக்யூரிட்டி.! திருப்பூரை மிரளவைத்த பனியன் கொள்ளையன்..! வைரல் வீடியோ.!

Summary:

North indian worker stolen hundreds of t-shirts in tirupur

திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் நூதனமான முறையில் பனியங்களை திருடிச்சென்று, கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், பனியன் உற்பத்திக்கு பெயர்போன மாவட்டம் திருப்பூர். இங்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் வேலை பார்த்துவருகின்றனர். இந்நிலையில், பனியன் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்துவரும் இளைஞர் ஒருவர் நூற்றுக்கணக்கான பனியன்களை தனது உடலில் மறைத்துவைத்து எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணைத்து பனியன்களையும் தனது கால், உடல் என மறைத்துவைத்து, அதன் மீது உடைகளை அணிந்துகொண்டு, பார்ப்பதற்கே மிகவும் குண்டா, வித்தியாசமாக தோன்றிய இளைஞரை, பணியிலிருந்த செக்யூரிட்டி பிடித்து விசாரித்துள்ளார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த ஆடைகள் முழுவதும் கைப்பற்றப்பட்டது. பல ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை இளைஞர் லாவகமாக திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement